தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு பி.எப் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தப்பா இயக்குனராக இருக்கும் Centaurs lifestyle brands நிறுவனம் அதன் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த பிஎஃப் பங்கு 23 லட்சத்தை முறையாக வைப்பு வைக்கவில்லை என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.