தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சசிகலாவின் அஇபுதமுக மற்றும் ராமதாஸின் பாமக ஆகிய கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி மொத்தம் 120 தொகுதிகளில் களம் காண உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி உடன்பாட்டின்படி,  அஇபுதமுக (சசிகலா அணி): 71 தொகுதிகள் பாமக (ராமதாஸ் அணி): 38 தொகுதிகள், கூட்டணி தோழமைக் கட்சிகள்: 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வேட்பாளர்கள் போட்டியிடும் சின்னங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. சசிகலா தரப்பைச் சேர்ந்த 82 வேட்பாளர்கள் (தோழமைக் கட்சிகள் உட்பட) ‘தென்னந்தோப்பு’ சின்னத்திலும், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் ‘சிலிண்டர்’ சின்னத்திலும் போட்டியிட உள்ளனர்.
மேலும் தேர்தல் திருவிழா 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.