
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மகப்பேறுகள் நடந்தால் அதில் 23 சதவீதம் என்ற அளவில் இறப்பு இருந்தது. இதனையடுத்து 2024-25 ஆம் ஆண்டில் அந்த இறப்பு 39 சதவீதமாக குறைந்தது.
இதனை தொடர்ந்து 2020-21-ஆம் ஆண்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் 9.7 சதவீதம் என்ற நிலையில் சிசு இறப்பு விகிதம் இருந்தது. தற்போது சிசு இறப்பு விகிதம் 7.7 சதவீதமாக குறைந்துள்ளது. இனியும் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.