கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ரயில்வே கேட் மூடாமல் இருந்த நிலையில் பள்ளி வாகனம் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த ரயில் பள்ளி வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனம் உருக்குலைந்த நிலையில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் தொண்டாமாநத்தம் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் நிவாஸ் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

கேட் மூடப்படாமல் இருந்ததால் பள்ளி வேன் ரயில் வரவில்லை என நினைத்து தண்டவாளத்தை கடந்ததாகவும் அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆத்திரத்தில் அங்கிருந்த கேட் கீப்பரை பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே விளக்கம் கொடுத்துள்ளது.

அதாவது கேட் கீப்பர் கேட்டை மூடுவதற்காக வந்த நிலையில் பள்ளி வேன் ஓட்டுனர் தான் மூட வேண்டாம் அதற்குள் நாங்கள் சென்று விடுவோம் என்று கூறியுள்ளார். செம்மாங்குப்பத்தில் இருந்து ரயில் வருவதை அறிந்து கேட் கீப்பர் மூடுவதற்காக சென்றபோது ஓட்டுனர் மூட வேண்டாம் என்று கூறியதாலயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் பள்ளி வேன் கடக்கும்போது விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தல நிலையில் ஒருவேளை கேட் கீப்பர் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்தது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.