தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் 234 தொகுதிகளுக்கும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் முதற்கட்டமாக கோவையில் நேற்று சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தற்போது அதிமுக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் கோவையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட சுற்று பயண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகளிடம் 2 ரூபாய் பிட்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக நிர்வாகி தங்கராஜ் என்பவரின் பேண்ட் பாக்கெட்டை பிளேடால் கிழித்து ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மற்றொரு நிர்வாகியான ஆனந்த் என்பவரிடமும் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
மொத்தமாக 2 லட்ச ரூபாய் பிட்பாக்கெட் அடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
