தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு திட்டத்தின் இணைய பக்கத்தை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் கூறியதாவது,”நாங்கள் நாகரிகமற்றவர்களா?, பார்ப்பதற்கு அப்படி தெரிகிறதா?. எங்களை நாகரிகமற்றவர்கள் என பேசுகிறவர்கள் தான் நாகரீகம் இல்லாமல் தமிழர்களை விமர்சித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டையும் ,பெரியாரையும் இழிவுபடுத்தி பேசுவது மத்திய அரசின் ஒரு புதிய பேட்டன். இதையே கொள்கையாகவும் வைத்துள்ளனர். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு தங்களது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்து வருகிறது. இதனை திசை திருப்பவே மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மொழிப் பிரச்சனை, கல்வி நிதி ஒதுக்குவதில் தாமதம் போன்றவற்றை பற்றி பல மாதங்களாக மத்திய அரசிடம் பேசி வருகிறோம். இவ்வாறு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
