தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விநாயகம். இவர் தமிழில் கடந்த வருடம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது விநாயகத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது ஹைதராபாத்தில் விமான நிலையத்தில் சி எஸ்எஃப் வீரர்களை அவர் மதுபோதையில் தாக்கியுள்ளார். இதனால் தான் அவரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஹைதராபாத் சென்றபோது அவர் போதையில் இருந்ததால் அங்கிருந்து அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்னதாகவும் மதுபோதையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்குதலில் ஈடுபட்டதால் நடிகர் விநாயகம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
