ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிறுநீரக பாதிப்பால் ஜூன் மாதமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பழங்குடியின தலைவர்களில் முக்கியமானவராக அறியப்படும் ஷிபு சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக 38 ஆண்டுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.