தமிழகத்தில் பரவலாக பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுடன் சேர்த்து, மேலும் சில மாவட்டங்களிலும் இன்று (அக். 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை (பள்ளிகள் மட்டும்) ஆகிய இடங்களையும் சேர்த்து, மொத்தம் 12 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யக்கூடிய கனமழை மற்றும் வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இவ்வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன
