உத்தரகாண்ட் அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையின் போது தினமும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பகவத் கீதை மற்றும் ராமாயணத்திலிருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூறவேண்டும்.
வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் விவாதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை இன குழந்தைகளை கட்டாயப்படுத்தி ராமாயணம், பகவத் கீதை கூற சொல்வது கொடுமையானது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
