தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை மக்கள் மத்தியில் உரையாடிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தீர்கள். நாங்களும் கூட்டணி வைத்தோம்.
நீங்கள் பாமக உடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். இப்போது நாங்கள் பாமக உடன் கூட்டணியில் உள்ளோம். நிச்சயமாக அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கின்றனர். அவர்கள் நம்மோடு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் என கூறினார்.
இன்று சிதம்பரத்தில் பேசும் போது எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுக கூட்டணியில் பாமக இல்லை. கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்று தான் கூறினேன் என தெளிவுபடுத்தியுள்ளார்.
