
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த மசோதா சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் முதல்வர் பினராய் விஜயனும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வக்பு மசோதாவுக்கு பிறகு சங்பரிவாரம் தேவாலயங்களை குறி வைத்துள்ளது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களின் ஆழமான விரோதத்தை காட்டுகிறது.
தேவாலய நிலங்கள் பற்றி தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஆபத்தான அறிகுறிகளை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளன. சங் பரிவாரம் வகுப்பு வாதம் மற்றும் மதங்களின் மீதான பகையை உண்டாக்கும் வேலை.
மேலும் ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு எதிராக மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.