கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தற்போது மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைப்பதால் தீ அணையாமல் வேகமாக பரவி வருகிறது. தற்போது காட்டு பகுதிக்கு உடனே சென்று தீயை அணைக்கும் வகையிலான தொழில்நுட்பம் இல்லை. இதனால் தீ தொடர்ந்து எரிகிறது.

இதுகுறித்து தோட்ட தொழிலாளர் சங்க குமரி மாவட்ட தலைவர் பி.நடராஜன் கூறியதாவது, காட்டுக்குள் ஏற்பட்டுள்ள தீயால் ரப்பர் மரங்கள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் வனவிலங்குகளும் உயிர் பிழைப்பதற்காக தப்பி ஓடுகிறது. எனவே காட்டுக்குள் தீ ஏற்படாத வகையில் தீ தடுப்பு காவலர்களை நியமித்து கண்காணிப்பதோடு, தனியார் வனப்பகுதி எல்லைகளில் தீ தடுப்பு கோடுகள் வெட்ட வேண்டும் என கூறியுள்ளார்.