கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி (37) என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சின்னசாமி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் வைத்து எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.