மலையாள சினிமாவின் மூத்த நடிகர் மாமுக்கோயா. நாடகக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மாமுக்கோயா மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாமுக்கோயா அனுமதிக்கப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமுக்கோயா இன்று திடீரென உயிரிழந்தார். இவருக்கு வயது தற்போது 76. மேலும் நடிகர் மாமுக்கோயாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.