காவல்துறையின் நிர்வாகச் செயல்பாடுகளை முழுமையாக நவீனப்படுத்தவும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் தமிழக அரசு தரப்பில் பல அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில் காவல் மற்றும் தீயணைப்புத்துறையை மேம்படுத்தும் பொருட்டு இந்த முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தமிழகக் காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பல்வேறு புதிய திருப்பங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் நிலையங்களின் தினசரி செலவினங்களைச் சமாளிக்க வழங்கப்படும் மாதாந்திர அவசரக் நிதி பல மடங்காக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களின் வகைகளைப் பொறுத்து இந்த நிதி இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.3,750, ரூ.6,000 மற்றும் ரூ.8,250 என்ற தொகையானது, இனி முறையே ரூ.30,000, ரூ.40,000 மற்றும் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு விசாரணைக் குழுக்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடமை நேரத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல், அடுத்த 5 ஆண்டுகளில் காவல்துறையில் மொத்தம் 29,108 புதிய ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். முதற்கட்டமாக 10,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதில் 5,000 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

இதன் மூலம் காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 22 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயரும். மேலும், செயற்கை நுண்ணறிவு, அதிநவீன டிஜிட்டல் தடயவியல், நேரடி கண்காணிப்பு மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்க மொத்தம் 212 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.