தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சர்வானந்த், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாகரத்து வதந்திகளில் சிக்கி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். 2023-ம் ஆண்டு ரக்சிதா ரெட்டியை மிகப்பிரமாண்டமாகத் திருமணம் செய்துகொண்ட சர்வானந்த், கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தைக்குத் தந்தையானார்.

இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து திருமணப் புகைப்படங்கள் மற்றும் தனது மகள் லீலா தேவி தொடர்பான பதிவுகளை அவர் திடீரென நீக்கியுள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது அவர் தனது மனைவியைப் பிரியப்போவதன் அறிகுறியா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோன்ற வதந்திகள் பரவியபோது சர்வானந்த் தரப்பு அதனை மறுத்திருந்தது. ஆனால், தற்போது ஆதாரப்பூர்வமாகப் புகைப்படங்கள் நீக்கப்பட்டிருப்பது இந்த விவாகரத்து செய்திகளுக்கு வலு சேர்த்துள்ளது. இருப்பினும் இது குறித்து சர்வானந்த் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வரவில்லை.

சினிமா வாழ்க்கையில் ‘நாரி நாரி நடும முராரி’ மற்றும் ‘பைக்கர்’ என அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்து ஏறுமுகத்தில் இருக்கும் சர்வானந்திற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.