குஜராத்தில் கடந்த மே 8ம் தேதி அன்று 10 ம் வகுப்பு பொதத்தேர்வு முடிவுகள் வெளியானது. சோட்டா உதேபூரில் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி 10 ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். வெளியான பொதுத்தேர்வு முடிவுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதாவது 10ம் வகுப்பு பொதத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதிய மாணவிக்கு, ஆப்சன்ட் என்பதால் ஃபெயில் என்று ரிசல்ட் வந்ததால் அவர் குழப்பத்தில் இருந்தார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். அதன் பிறகு, சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா தேர்வுகளையும் எழுதியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பர்மர் தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட 6 பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.