
தமிழகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியமானது கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனைப் போலவே முன்னாள் எம்எல்ஏக்களின் குடும்ப ஓய்வூதியம் 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. முன்னாள் எம்எல்ஏ மற்றும் மேலவை உறுப்பினர்கள் மருத்துவப் படியை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.