திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, 50 ஆண்டு கால  வரலாற்றை மக்கள் மறந்து விட்டார்கள் என்பதற்காக….  புதிதாக மக்களை ஏமாற்றுவதற்காக…  புதுப்புது கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்திற்கு ஓராண்டு காலம் பதவி இருந்தாலும் கூட, தலைவர் கலைஞர் அவர்கள் துணிச்சலாக அன்றைய தினம் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு…  சட்டமன்றத்திற்கும்ம்,  பாராளுமன்றத்திற்கும் ஒரே நேரத்திலே தேர்தலை கொண்டு வந்து சந்தித்த  இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

அதேபோல 1971 தேர்தலில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. தந்தை பெரியார் எல்லோருக்கும் தெரியாது. பெரியார் அவர்கள் கட்சியை ஆரம்பித்த நாளிலிருந்து மறைகிற வரை அவருக்கு என்று ஒரு கொள்கை இருந்தது. அந்த கொள்கைக்கும், திராவிட முன்னேற்ற கழக  கொள்கைக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும்,  நம்முடைய தாய் கழகம்  ”திராவிட கழகம்” தந்தை பெரியார் தான் நமக்கு வழிகாட்டி என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் 1967இல் காங்கிரஸை ஆதரித்தார். 1971இல்  நம்மை ஆதரித்தார். ஆதரிப்பதற்கு முன்பாக திடீரென்று தேர்தல் வரும் என்று பெரியாரும் எதிர்பார்க்கவில்லை…  இந்திரா காந்தி அம்மையார் தேர்தலை வைப்பார்…  மத்தியில் ஆட் சி  கவிழும் என்று கருதவில்லை. அதற்கு முன்னதாகவே ராமாயணத்தை எதிர்த்து,  ராமரை எதிர்த்து,  ஒரு போராட்டத்தை  நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் போராட்டத்தினுடைய ஊர்வலம் சேலத்தில் போய்க் கொண்டிருக்கிறது. பெரியார் ஊர்வலத்தில் போகிறார்.

பெரியார் மீது எவனோ ஒருவன் செருப்பை தூக்கி எறிகிறான். இங்கேதான் கவனிக்க வேண்டும். இப்பொழுது திரிச்சி  பேசுகிறார்கள். பெரியார் ராமரை செருப்பால் அடிக்கவில்லை. பெரியாரை தான் எவனோ ஒரு கயவன் செருப்பை தூக்கி அடித்தான். அந்த செருப்பு நல்ல செருப்பு. பெரியார் மீது படாமல் கீழே விழுந்தது. கீழே விழுந்த செருப்பை எடுத்து ஒருவன் திருப்பி அடிச்சான், அது போய்  ராமர் படத்தில் பட்டது.  அதுதான் ஒரு உண்மை. ஆனால் இதை வைத்து ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தை செய்தார்கள். சென்னை கடற்கரையில் ஒரு பெரிய கூட்டத்தையே போட்டார்கள் என தெரிவித்தார்.