செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், எத்தனை ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடக்குது.. ஆனாலும் மாறிமாறி வயல் வறண்டு போது… விவசாயி சாகுறான்… கஷ்டப்படுறோம்…. தண்ணி வாங்கி தர மாட்டேங்குறாங்க..   மறுபடியும் அவங்களுக்கே தான் வலிமை கொடுக்குறீங்க.. 

இவரு நம்ம ஆளு போய் அங்க இருக்குற காங்கிரஸ் வெற்றிக்கு உழைச்சாரு. இப்போ அவன் இங்க வந்து இங்க இருக்குற காங்கிரஸ் வெற்றிக்கு உழைப்பானா..?  இந்த திமுக வெற்றிக்கு உழைப்பானா…? உங்கள உயிரோடவே மாலை போட்டு,  அவன் கேலி பண்றான். உங்களுக்கு கோவம் வருதோ, இல்லையோ, எங்களுக்கு கோவம் வருது.

ஏன்னா எனக்கு கருத்துமுரண் இருக்கு…. கொள்கை முரண் இருக்கு..  உங்க மேல… அது வேற. ஆனால் என் இனத்தின்… நிலத்தின்… இந்த மண்ணின் ஒரு முதலமைச்சரை அவன் அவமதிக்கிறது எங்களுக்கு பெரிய தன்மான இழப்பா தெரியுது. அப்போ வெறி வருமா ? வராதா ? என் பிள்ளைகள் காரை  வந்து ஒட்டி வந்தா தடுத்து,  அடிக்கிறது… அது பண்றது… இது பண்றது…  ஏன் உனக்கு தான் கை இருக்குதா ? எனக்கு அடிக்க தெரியாதா ? அப்போ எவ்ளோ காலத்துக்கு பொறுமை சோதிக்கிறது என தெரிவித்தார்.