செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நான் அண்ணாமலையிடம் கேட்டு கொள்ள விரும்புவதெல்லாம்  வளர்ச்சிக்கு இன்றைக்கு கோவை மட்டுமா பலியாகி இருக்கு. இந்திய நாடே பலியாகி இருக்கிறது என்பதுதான் இன்றைக்கு இருக்கிற எதார்த்தமான உண்மை. ஒரு காலத்தில் சொன்னாங்க…. வளர்ச்சினா மோடி என்று சொன்னார்கள்….. மோடி என்றால் ? வளர்ச்சி என்று சொன்னார்கள்….

இந்த 9 1/2 ஆண்டு காலத்தில் இந்தியாவில் யார் வளர்த்திருக்கா ? தொழில் வளர்ந்திருக்குதா ? விவசாயம் வளர்ந்து இருக்குதா ? தனிநபர் வருமானம் வளர்ந்திருக்குதா? G-20 மாநாட்டுல போய் மோடி பேசுகிறார். G -20 மாநாட்டில் இவரு பேசுறதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது இல்ல…. அங்க போய் பேசுகிறார்.

ஏற்கனவே இந்தியா உலகத்தில் 5ஆவது வலிமையான பொருளாதாரத்தில் இருந்தது. 2027ஆம் ஆண்டுக்குள்ள நாங்க 3ஆவது இடத்துக்கு கொண்டு வந்துருவோம்னு சொல்லி,  அவர் பேசுகிறார். என்ன உங்க ஆட்சியில் வலிமையான பொருளாதாரம்  மாறி  இருக்கு.  ஜி-20  வந்த போது பல பத்திரிகை செய்திகளே வந்திருக்கு, விவரங்கள் வந்திருக்கிறது.

G-20  நாட்டில் அங்கம் பெற்று இருக்கின்ற 20 நாடுகளில் மிகக் குறைவான தனிநபர் வருமானம் பெற்ற நாடு இந்தியா தான். 20ஆவது இடத்தில் இருப்பது இந்தியா தான். மீதி இருக்கிற நாடெல்லாம் தனிநபர் வருமானத்தில் இந்தியாவை விட முன்னாடி இருக்குது. அப்படி இருக்கும் பொது, மோடி என்ன இந்தியாவை பொருளாதாரத்தில்  உயர்த்திட்டாரு என கேள்வி எழுப்பினார்.