சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை அவர் மடக்கி உள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது.

ஆட்டோவை நிறுத்துவது போல பாசாங்கு செய்த அந்த ஓட்டுநர், திடீரென அந்தப் பெண் காவலரைக் கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றதாகத் கூறப்படுகிறது.

இதனால், அந்தப் பெண் காவலர் உதவிக்குக் கூச்சலிட்டார். வேகமாகச் சென்ற ஆட்டோவைப் பொதுமக்கள் ஒன்று திரண்டு மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், பெண் காவலர் மீட்கப்பட்டதுடன், குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் மயிலாப்பூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.