டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் இந்த ஆண்டு தமிழ்நாடு வாகனம் பங்கேற்க இருக்கிறது. கடந்த ஆண்டு புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் பங்கேற்க இருக்கிறது.

இதில் ஒளவையார், வேலு நாச்சியார், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற சிலைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 7 கட்டமாக நடந்த தேர்வுகளின் இறுதியாக 16 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.