தற்போது உலகெங்கிலும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒருவருக்கொருவர் தங்களது தகவலை பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப் ஒரு அத்தியாவசிய செயலியாக மாறிவிட்டது என்று சொல்லலாம். Whatsapp நிறுவனம் தன் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் whatsapp பயன்படுத்தும் பலரும் பல வருடங்களாக எதிர்பார்த்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் போட்டோக்களை ஷேர் செய்யும்போது whatsapp தானாக அதனை அழுத்தி கம்ப்ரஸ் செய்துவிடும். இதன் காரணமாக எதிர்முனையில் இருப்பவர்களுக்கு நல்ல தரமான போட்டோ சென்றடையாது. இனி High resolution-இல் தரமான படங்களை whatsapp வாயிலாக ஷேர் செய்யலாம். இந்த அப்டேட் Beta வெரசனுக்கு வந்துவிட்டது.