
அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்பதாக ஓபிஎஸ் தரப்பு சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த ஆடியோவினை வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதையடுத்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, முனுசாமி பணம் இருக்கும் பக்கம் ஒட்டிக்கொள்பவர். அவர் ஓபிஎஸ் பற்றி பேசக் கூடாது. மீறி பேசினால் இன்னும் நிறைய ஆடியோக்கள் மற்றும் வீடியோ வெளியாகும் என எச்சரித்தார். அதன்பின் கட்சி விவகாரங்களுக்காக தனிப்பட்ட முறையில் பேசிய அனைத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக OPS அணி தவறான முறையில் தன்னை சித்தரிப்பதற்கு இப்படி தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவதாக முனுசாமி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “கேபி முனுசாமி பணம் கேட்டது உண்மையாக இருக்கலாம். எனினும் MLA சீட்டுக்காக பணம் கேட்டார் என்பது உண்மையில்லை. அரசியலை பொறுத்தவரையிலும் கொடுக்கல் வாங்கல் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக பல நபர்களிடம் பேசுவார்கள். இது அரசியலில் சகஜமாகும். ஆகவே ஆடியோவை எல்லாம் வெளியிடுவது நாகரீமற்ற செயல் ஆகும்” என அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.