தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்களை  நிரப்புதல், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைதல், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உயர் கல்விக்கான ஊக்கத்தொகை, நிலுவை தொகை, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

தங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றா விட்டால் இதே கோரிக்கையை  வலியுறுத்தி மார்ச் 4-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் மற்றும் மார்ச் 24-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் போன்றவர்களை நடத்துவதற்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.