டெல்லியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு கார் டிரைவர் இடையே ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பற்பர்கஞ்ச் பகுதியில் இருந்து மருதி விஹார் வரை டாக்சியில் பயணம் செய்த அந்த பெண்கள், பாதியில் வாகனத்தை நிறுத்தி இறங்கி விட்டனர்.
பயணித்ததற்கான கட்டணம் கேட்ட டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், பணம் தர மறுத்ததுடன் டிரைவர் தவறாக நடந்துள்ளார் எனவும் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் பற்றிய வீடியோவில், டிரைவர் பணம் கேட்பதையும், “நான் எங்கு வேண்டுமானாலும் உங்கள் கொண்டு சென்று விட தயார்” என கூறுவதும் தெளிவாக காணப்படுகிறது.
Kalesh b/w Uber cab driver and Customer over some fare charges. pic.twitter.com/4pAynmIrNT
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 1, 2025
ஆனால் அந்தப் பெண்கள், டிரைவரை தானாகவே ரைடு ரத்து செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 90,000-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “பணம் இல்லையென்றால் ஏன் டாக்சியில் பயணம் செய்கிறீர்கள்?”, “இது திட்டமிட்ட சூழ்ச்சி போல உள்ளது” என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், “அவர்கள் வாடிக்கையாளர்கள் அல்ல, இலவச பயணம் தேடும் பயணிகள்” எனக் கடுமையான கருத்துகளும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட டாக்ஸி நிறுவனங்கள் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.
