ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தன் ஊழியர்கள் அவர்களின் கணக்கிலுள்ள தொகை குறித்த முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளும் விதமாக இ-பாஸ்புக் வசதியை முன்னரே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இ-பாஸ்புக்கை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது கணக்கின் முழு விபரங்களையும் கிராஃபிக்ஸ் முறையில் பார்க்கக்கூடிய மேம்பட்ட வசதியை இப்போது EPFO அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இ-பாஸ்புக் வசதியை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஊழியர்கள் EPFO அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு தேவையான விபரங்களை நொடிப்பொழுதில் தெரிந்துக்கொள்கின்றனர். ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) தன் ஊழியர்களின் நலனுக்காக ஆன்லைன் வாயிலாக பல வசதிகளை வழங்கி வருகிறது. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-ஆம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதம் ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது.