இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்து குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக இருப்பதால் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதேசமயம் பயணிகளின் நலனுக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய ரயில்வேயில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி படுக்கை மற்றும் ஏசி பெட்டிகளில் இரவு நேர பயணம் செய்யும்போது பயணிகள் சத்தமாக சக பயணிகளுடன் அல்லது தொலைபேசியில் பேசக்கூடாது. விளக்குகளை இரவு 10 மணிக்கு மேல் எறிய விடக்கூடாது. இரவு பத்து மணிக்கு மேல் பயணிகளை டிக்கெட்டை காட்டுமாறு டிக்கெட் பரிசோதகர் கூறக்கூடாது. ஆன்லைன் உணவு சேவைகள் இரவு 10 மணிக்கு மேல் வழங்கப்படாது. ஆனால் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உங்கள் உணவை முன்கூட்டியே ஏற்பாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.