இந்திய குடிமகன்களின் முக்கிய அடையாள ஆவணங்களுள் ஒன்றான ஆதார் கார்டு எப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருக்கிறதோ அதேபோல் பான் எண் ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தனிப்பட்டதாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பான்கார்டு மட்டுமே வைத்திருக்கவேண்டும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச்சட்டத்தை மீறும் செயலாக கருதப்படுகிறது.

அவ்வாறு 2 பான் கார்டுகளை வைத்து இருந்தால் அவர்கள் சட்டரீதியான விளைவுகள் மற்றும் அபராதங்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஒரு நபர் ஒன்றுக்கு அதிகமான பான் கார்டுகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் வருமான வரிச்சட்டம், 1961-ன் பிரிவு 272 B-ன் கீழ் தகவல் தொழில்நுட்பத்துறை அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்.

அதோடு 2 பான்கார்டை வைத்திருப்பவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட நேரிடும். ஆகவே 2 பான்கார்டுகளை வைத்து இருந்தால் அந்த கூடுதல் பான் கார்டுகளை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். அதுமட்டுமின்றி பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஜூன் 30, 2023க்-குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துவிட வேண்டும். இல்லையெனில் ஜூன் 30-க்கு பின் அவர்களது பான்கார்டு செயலிழந்து விடும்