தமிழில் வெற்றி பெற்ற திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்ய அங்கு உள்ள இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி வீரம், கைதி, ராட்சசன், மாநகரம், காஞ்சனா ஆகிய பல்வேறு படங்கள் இந்திக்கு போய் இருக்கிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் டைரக்டில் கதிர், கயல் ஆனந்தி போன்றோர் ஜோடியாக நடித்து 2018-ல் திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கிறது. பரியேறும் பெருமாள் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோகர் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. பரியேறும் பெருமாள் இந்தி ரீமேக்கில் கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சித்தார்த் சதுர்வேதி பெயர் அடிபடுகிறது.