தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. மேலும் இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். இதையடுத்து வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் வருடம் மீனா திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் மீனாவின் கணவர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதவாது “எனக்கு ஹ்ரித்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும்.
என் திருமணத்திற்கு முன்னதாக என் அம்மாவிடம் எனக்கு ஹ்ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளையை பாருங்க என கூறினேன். மேலும் நான் அவரின் மிகப் பெரிய ரசிகை” என்று கூறியுள்ளார். கணவர் மறைவுக்கு பிறகு மீனா 2-ஆம் திருமணம் செய்ய போகிறார் என சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். எனினும் அதில் உன்மை இல்லை என மீனா தரப்பு முன்பே விளக்கமளித்து விட்டது.