தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சசிகுமார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில் அயோத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அயோத்தியிலிருந்து ஒரு குடும்பம் தமிழ்நாட்டுக்கு வர திடீரென நடந்த ஒரு விபத்தில் அந்த குடும்பத்தின் தாய் இறந்து விடுகிறார். அதன் பிறகு அந்த குடும்பத்துக்கு 2 பேர் உதவி செய்வதை அடிப்படையாக வைத்து அயோத்தி திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்துள்ளனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய வலைதள பக்கத்தில் அயோத்தி படம் நன்றாக இருக்கிறது அனைவரும் சென்று பாருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த விளம்பர பதிவுக்கு நீங்கள் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று கேள்வி இருந்தார். இதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில் நீ சேர்ந்திருக்கும் இடம். அப்படி ஒற்றுமையைப் பற்றி பேசினால் எரியுமே என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம் மற்றும் ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.