மலாவி நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞர் எர்னஸ்ட் ஆண்ட்ரூ, எரிபொருள் அல்லது மின்கலன்கள் ஏதுமின்றி காற்றைக் கொண்டு இயங்கும் மின்சார உற்பத்தி கருவியைக் கண்டுபிடித்து தனது கிராமத்திற்குப் புதிய ஒளியைக் கொண்டுவந்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய எர்னஸ்ட், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு இந்த வினோதக் கருவியை உருவாக்கியுள்ளார். பாட்டில்களில் நிரப்பப்படும் காற்றின் மூலம் மின்காந்தப் புலத்தை உருவாக்கி, அதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதாகக் கூறும் இவரது கண்டுபிடிப்பு, தற்போது சுமார் 1000 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
A 18 years old Malawian school dropout, Ernest Andrew brings free electricity to his village using a self-made air-powered generator, bypassing use of fuel, oil or batteries.
He has so far connected nine homes and plans to power up the community school. 👏🏿👏🏿 pic.twitter.com/GLI7e3IgBG
— Zoom Afrika (@zoomafrika1) January 7, 2026
இதன் மூலம் அவரது கிராமத்தில் உள்ள ஒன்பது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள பள்ளிக்கும் இலவச மின்சாரம் வழங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இக்கருவியின் உதவியால் கிராம மக்கள் கைபேசிகளை மின்னேற்றம் செய்வதுடன், சலூன்கள் போன்ற சிறு தொழில்களையும் நடத்தி வருவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
