கனடாவில் நிலவும் மைனஸ் 20 டிகிரி கடும் குளிரில் இளம்பெண் ஒருவர் தனது தலைமுடியை நனைத்த சில நிமிடங்களிலேயே அது ஐஸ் கட்டியாக உறைந்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், திறந்தவெளியில் நின்றபடி தனது தலையில் தண்ணீரை ஊற்றும் அந்தப் பெண்ணின் தலைமுடி, அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே செங்குத்தாக உறைந்து போவதைக் காண முடிகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by SARU (@saru_canada_official)

‘சரு கனடா அபிஷியல்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை சுமார் 39 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. கடும் குளிரால் திரவ நிலையில் உள்ள தண்ணீர் கூட உடனுக்குடன் பனிக்கட்டியாக மாறும் வியக்கத்தக்க நிலையை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், கனடாவின் உறைபனிக் காலச் சூழல் குறித்து ஆச்சரியத்தையும், அதே சமயம் இதுபோன்ற ஆபத்தான சோதனைகளைத் தவிர்க்குமாறு எச்சரிக்கைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.