அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், குடியேற்றத் துறை ஏஜென்டுகள் (ICE) தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 37 வயதான ரெனி நிக்கோல் குட் (Renee Nicole Good) என்ற பெண் தனது காரில் அங்கிருந்து செல்ல முயன்றார்.
ஏஜென்டுகள் காரை நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தாமல் சென்றதாகக் கூறி, ஒரு அதிகாரி காரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் தலைப்பகுதியில் குண்டு பாய்ந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “அந்தப் பெண் அதிகாரிகளைக் காரால் மோதிக் கொல்ல முயன்றார், எனவே தற்காப்புக்காகவே அதிகாரி சுட்டார்” என்று தெரிவித்துள்ளது.
🚨 Videos don’t lie.
So here is slow-motion footage shows ICE agents illegally detaining a U.S. citizen in Minneapolis… and shooting her as she tries to drive away.
Watch closely: she never drove toward an agent.
The agents attempted to aggressively force her out of her car… pic.twitter.com/RLk5Qrjbzb
— Jesus Freakin Congress (@TheJFreakinC) January 7, 2026
ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey) இந்த வாதத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். “வீடியோ ஆதாரங்கள் அரசு சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன; இது அதிகார துஷ்பிரயோகம்” என்று சாடியுள்ள அவர், உடனடியாக ஐசிஇ (ICE) ஏஜென்டுகள் மினியாபோலிஸ் நகரை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆவேசமாக உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
