புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சம்பட்டி பகுதியில் மலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொன்னைப்பட்டி ஊராட்சி மூலங்குடியில் மின்கம்பி அறுந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததால் மலையாண்டி அங்கு சென்று மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மலையாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மலையாண்டியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.