விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.