காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தையொட்டி பல்வேறு ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அதன்படி பிளிப்கார்டு காதலர் தினத்தை முன்னிட்டு பயனர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டுகளை வழங்குகிறது.

நீங்கள் 2 திரைப்பட டிக்கெட்டுகளை இலவசமாக பெற விரும்பினால், ரூபாய்.800 மதிப்புள்ள தனிப்பட்ட பராமரிப்பு (பர்சனல் கேர்), அழகு பராமரிப்பு (பியூட்டி கேர்) (அ) சாக்லேட் வாங்க வேண்டும். இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு பயனாளர்கள் 800 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14 ஆம் தேதி இரவு வரை இச்சலுகை இருக்கும். பின் கூப்பனை பெற்ற பின் ஏப்ரல் 30 வரை அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.