பிளிப்கார்டு காதல் ஜோடிகளை மனதில் வைத்து பிப்ரவரி 6 முதல் ஃபிளிப் Heart Days Sale 2023-ஐ தொடங்கியுள்ளது. இதில் 80 சதவீதம் வரை தள்ளுபடியில் ஷாப்பிங் செய்துக்கொள்ளலாம். இந்த விற்பனையானது பிப்ரவரி 6 -12 வரை நடைபெறுகிறது. Heart Days Sale 2023 விற்பனையில் எதில் எவ்வளவு தள்ளுபடி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டின் இந்த விற்பனையில், 100-க்கும் அதிகமான பிராண்டுகளின் பரிசு அட்டைகளுக்கு (கிப்ட் வவுச்சர்) 50% வரை தள்ளுபடி கிடைக்கும்.

Ecraftindiaல் 50 சதவீதம் வரையிலும் தள்ளுபடி கிடைக்கிறது. Indigiftsல் 80 சதவீதம் வரையிலும் தள்ளுபடி கிடைக்கிறது. இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் படி, ஜூவல்லரி காம்போ, குஷன் காம்போ, கீசெயின் காம்போ, ஷோபீஸ் காம்போ, வாட்ச் காம்போ, ஆர்டிபிஷியல் காம்போ போன்றவற்றிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கும். வாசனை திரவியங்கள், தனிப்பட்ட பராமரிப்பு (பர்சனல் கேர்), கிஃப்ட் பாக்ஸ் போன்றவற்றிலும் அதிரடியான தள்ளுபடிகளை பெறலாம்.