ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் தொடங்கியுள்ள காதலர் தின சலுகை சில நாட்களுக்கு நீடிக்கும். இச்லுகையில் சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு மிகப் பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே நேரம் சில ஸ்மார்ட் போன்களை மக்கள் மொத்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும். பிளிப்கார்டு SAMSUNG Galaxy F13 (Waterfall Blue, 64 GB) (4 GB RAM) ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் மிகக்குறைந்த தொகையை செலுத்தி இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட் போனை வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூபாய்.14,999 ஆகும். இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 34% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது பிளிப்கார்டு ரூ.9,250 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், அதாவது பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் வாடிக்கையாளர்கள் வெறும் ரூபாய்.549 செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.