
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், நீதிமன்றத்தின் உடைய தீர்ப்புகளை வைத்துக்கொண்டு அண்ணா திமுக என்கிற இயக்கத்தை அவர் அபகரித்து முடித்து விட்டதாக நினைக்கிறார். ஒரு நீதிமன்றம் ஒரு கட்சிக்கான தலைமையை தீர்மானிக்க முடியாது….. அந்தக் கட்சிக்கு யார் தலைவனாக வரவேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள்…. அந்த தொண்டனின் முடிவு சரியா? என்பதை வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் உறுதிப்படுத்துவார்கள். இப்படித்தான் மக்கள் மன்றத்தில் ஒரு தலைவன் உருவாகிறான்…..
ஆனால் எடப்பாடியை பொருத்தவரை ஒரே இரவுக்குள் அண்ணா திமுகவில் அதிபராகி விட்டதாகவும் தனக்கு கிடைத்த தீர்ப்புகளின் அடிப்படையில்….. எங்களை பொறுத்த வரை எடப்பாடிக்கு கிடைத்த அத்தனை தீர்ப்புகளையும் ஊனமுற்றத்திற்காக நாங்கள் பார்க்கிறோம். அண்ணா திமுகவின் விதிகளையும், புரட்சித்தலைவரும் வகுத்த சட்ட விதிகளையும், புரட்சித்தலைவர் அம்மா பின்பற்றிய அந்த சட்ட விதிகளையும் எடப்பாடியின் சதிகளையும் சரியாக பொருத்திப் பார்க்காத காரணத்தினால், அவருக்கு பல சாதகமான தீர்ப்புகள் அமைந்திருக்கிறது.
ஆனாலும் கூலாங்கற்களுக்கு நடுவே வைரம் செழிப்பது போல, ஜெயச்சந்திரன் என்கின்ற ஒரு நீதி அரசருடைய தீர்ப்பு….. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்ட விதிகளை உற்று நோக்கி, இந்த கட்சிக்கு இதுதான் சரியான தீர்ப்பு என்று எழுதிய தீர்ப்பையும் அதிமுக தொண்டர்கள் மனதார வரவேற்றார்கள் என தெரிவித்தார்.