காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பஞ்சாபில் 11 நாட்கள் பாதயாத்திரை செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை மறுநாள் இமாச்சலப் பிரதேசம் செல்கிறார். இமாச்சலப் பிரதேசத்தில் ராகுல் காந்தி ஒரே ஒரு நாள் மட்டும் நடைப்பயணம் செய்கிறார்.

அங்கிருந்து அவர் வருகின்ற இருபதாம் தேதி காஷ்மீருக்குள் நுழைகிறார். காஷ்மீரில் உள்ள லாகம்பூர், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் காஷ்மீர் பாதயாத்திரை தொடர்பாக உளவு அமைப்புகள், பாதுகாப்பு நிறுவனங்கள் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. காஷ்மீரில் குறிப்பிட்ட இடங்களில் நடை பயணம் வேண்டாம் என்றும் அது மாதிரியான இடங்களில் காரில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.