தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை ஆகும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது தமிழ்நாட்டில் உள்ள சிலருக்கு அறிவு வளரவில்லை. ஆள்மட்டும் உயரமாக இருக்கிறார்கள் எனக் சொல்லிய ஜெயக்குமாரிடம், யார் என கேள்வி எழுப்பியதற்கு நான் எப்போதும் யாரை திட்டுவேனோ அவர் தான் என மறைமுகமாக விமர்சனம் செய்தார். எங்களின் கட்சியில் சசிகலா மூக்கை நுழைக்கவேண்டாம். அவர்களுக்கும் (ஒ.பி.எஸ், சசிகலா) எங்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை” என்று பேசினார்.