சேலம் ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பாக 34ம் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது. இப்போட்டி ஆத்தூர் உடையார்பாளையத்தில் இருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. அப்போது முதலில் சிறிய குதிரைகளுக்கான போட்டி நடந்ததில் ஆத்தூர், திருச்சி, கோவை, சேலம், குமாரபாளையம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வந்த 17 சிறிய குதிரைகள் போட்டியில் பங்கேற்றது.

குதிரை ரேக்ளா போட்டி  உடையார்பாளையம் காந்தி சிலையில் இருந்து 10 கி.மீ தூரம் கொத்தாம்பாடி எல்லை நிர்ணயிக்கப்பட்டு துவங்கியது. இவற்றில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவரின் நவீன் பிரதர்ஸ் குதிரை முதல் பரிசு 20 ஆயிரத்தையும், 2வது பரிசை ஏவிஎம் ஃப்ரூட்ஸ் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது குதிரை 15 ஆயிரத்தையும் வென்றது. திருச்சியை சேர்ந்த சங்கிலி கருப்பன் உள்ளிட்ட குதிரைகள் 3ஆம் பரிசை தட்டிச்சென்றது. அதன்பின் 14 கி.மீ எல்லையாக கொண்டு பெரிய குதிரைகளுக்கான போட்டி நடந்தது.