அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என்று கூறினார். அதிமுகவை பொறுத்தவரை இப்போது பிளவு பட்டிருக்கின்றது எனவும் ஒற்றுமையோடு அதிமுகவினர் செயல்பட்டால் நல்லது என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.