திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தென் தமிழ்நாட்டின்  ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவோட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆன்மீக பயணமாக வராங்க. பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து போறாங்க.  அவங்க எளிதாக வந்து போவதற்கு எதுவா மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கணும்னு நாங்க ஏற்கனவே வச்ச கோரிக்கையை மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் கனிவோடு பரிசீலிக்க வேண்டுகிறேன்.

லேசியா மற்றும் ஜப்பான் நாடுகளோட தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தக தொடர்பு கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு சென்னை – பினாங்கு, சென்னை – டோக்கியா இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்கணும்னு நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அதோட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோட இரண்டாம் கட்ட பணிகளுக்கு பங்குப்பகுமான அடிப்படையில் ஒன்றிய அரசினுடைய பங்களிப்பை விரைந்து வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நெடுஞ்சாலை துறை பொறுத்தவரை தமிழ்நாட்டில இப்போ தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நகாய்  செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

சமீப காலமா இருவழிச்சாலையாக  மேம்படுத்துகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்க கட்டண வசூலிக்க படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். அடுத்து திருச்சி மாவட்டத்தோட MSME நிறுவனங்கள் தான் பெல் பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கிட்டு வந்தாங்க. தற்போது பெல் நிறுவனத்திடம் இருந்து இவங்களுக்கு கேட்பானையால்  இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் MSME  நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்து இருக்காங்க.

எனவே பெல் நிறுவனம் மீண்டும் அதிகப்படியாக கேட்பானைகளை இவங்களுக்கு வழங்க ஆவணம் செய்யப்பட வேண்டும் என்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிந்த ஒன்று தான். கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில கடுமையான மழைப்பொழிவு தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமா அந்த மாவட்டங்கள பொது உட்கட்டமைப்பு  பொருத்த சேதம் அடைந்திருக்கு.

மக்கள் வாழ்வாதாரம் மோசமா பாதிக்கப்பட்டு இருக்கு. எனவே அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதி வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோம் என்று எண்ண வேண்டாம்.  பறந்து விரிந்த இந்திய திரு நாட்டுல கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாய் இருந்து கல்வி, மருத்துவம்,  அவசிய தேவைகள்,

உதவிகள் ஆகியவற்றை செஞ்சு தர வேண்டிய முக்கிய கடமை மாநில அரசுகளுக்கு தான் இருக்கு. மாநிலத்திற்காக கோரிக்கை வைக்கிறதும்,  மாநில உரிமைகளை நிலைநாட்டுறதும் அங்கு வாழ்கின்ற மக்களுடைய கோரிக்கைகள் தான் தவிர,  அவை அரசியல் முழக்கங்கள் அல்ல. அந்த வகையில் தமிழ்நாடு அரசுயின் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றி தருவார் என நான் நம்புகிறேன்.