தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் அதனை தொடர்ந்து ஜூன் 6-ம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் அனைத்து மாணவர்களின் பெற்றோர் எண்களுக்கும் ஒரு ஓடிபி அனுப்புவதன் மூலம் அவர்களின் செல்போன் எண்களை சரிபார்க்கின்றனர். பல பெற்றோருடைய செல்போன் எண்கள் தவறானதாகவும் சில எண்கள் உபயோகத்தில் இல்லாமலும் உள்ளன. எனவே பெற்றோர்கள் சரியான செல்போன் எண்ணை பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.