இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மின்கட்டணம் தொடர்பான போலி SMS மீண்டும் உலா வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, போலி SMS இல் இருக்கும் எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதில் இருக்கும் எண்ணைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே. மின் கட்டணத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் உதவிக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.